திருக்குறள்

'சிறந்த ஜோடி நயன்தாரா - பிரபு தேவா' - கேலிக்கூத்தான ஒரு விருது!!!

Nayanthara and Prabhu Deva Best Couple of The year
ஒரு ஆங்கில சினிமா பத்திரிகையின் விருது வழங்கும் (ஒரு வெளம்பரம்ம்ம்!)
 விழா சமீபத்தில் ஹைதராபாதில் நடந்தது.A நயன்தாரா - பிரபு தேவா
 'கள்ளக் காதல்', சட்ட விரோத திருமணம் [^], இருவருக்கும் எதிரான நடவடிக்கை [^] பற்றியெல்லாம் ஒரு பக்கம் பரபரப்பாக செய்திகள் [^] வெளியாகிக்
கொண்டிருக்கும் நிலையில், இந்த இருவரையும் அழைத்து சிறந்த
 ஜோடி (தம்பதி) விருதினை வழங்கியிருக்கிறார்கள் ஹைதராபாதில்!
தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழித் திரைப்படக்
கலைஞர்களுக்கு இதில் விருதுகள் வழங்கப்பட்டன.

தமிழில் சிறந்த நடிகராக பிரகாஷ் ராஜும், சிறந்த நடிகையாக
தமன்னாவும் தேர்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
சிறந்த படத்துக்கான விருதினை பசங்க படம் வென்றது.

வாழ்நாள் சாதனையாளர் விருது பிரபல தெலுங்கு மற்றும்
 தமிழ் படத் தயாரிப்பாளர் டி ராமாநாயுடுவுக்கு வழங்கப்பட்டது.

அதுவரை எல்லாமே சரியாகத்தான் நடந்தது. அதன் பிறகு
நடந்ததுதான் அபத்தத்தின் உச்சம் என வர்ணிக்கப்படுகிறது
திரையுலகில்.

ஏற்கெனவே திருமணமாகி குழந்தைகளுடன் வசிக்கும் பிரபு தேவாவையும்,
அவருடன் கிசுகிசுக்கப்பட்டு வரும் நயன்தாராவையும் சிறந்த ஜோடியாகத்
(தம்பதியாக - best couple award) தேர்ந்தெடுத்து விருது வழங்கியது
இந்தப் பத்திரிகை.

இந்த இருவருக்கும் திருமணமாகவில்லை என்பது ஒரு புறமிருக்க,
இருவரும் இதுவரை எந்தப் படத்திலும் சேர்ந்து நடித்தது கூட இல்லை
 என்பதுதான் இந்த விருதை கேலிக் கூத்தாக்கிவிட்டது.

விழாவுக்கு வந்திருந்த ஒரு இயக்குநர் [^] இப்படிக் கூறினார்: "
சமூக நியதி, கட்டுப்பாடு, ஒழுக்கம் என்றெல்லாம் பத்திரிகைகள்தான்
 பெரிதாக கூப்பாடு போடுகின்றன. ஆனால் இன்றைக்கு அதே பத்திரிகையுலகம்,
சட்டவிரோத உறவுக்குள் வாழும் இருவருக்கு சிறந்த தம்பதி விருது கொடுக்கிறது.
 எல்லாம் விளம்பர ஸ்டன்ட் என்பதைத் தவிர இதை வேறு எப்படிச் சொல்வது...,"
என்றார் கடுப்புடன்.
நன்றி-தட்ஸ் தமிழ்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற