திருக்குறள்

தங்கத்தில் இத்தனை வழிகளா!!!

ழக்க தோஷம் என்ற ஒன்று உண்டு. தங்கத்தை நகையாக வாங்கிப் பழக்கப்பட்டவர்கள் நகையாகத்தான் வாங்கிக்கொண்டிருப்பார்களே தவிர, வேறு எந்த வழிகளில் அந்த உலோகத்தில் முதலீடு செய்யலாம் என்று யோசிப்பதே இல்லை. அதே போலத்தான் தங்கத்தை நாணயமாக வாங்குபவர்கள் தொடர்ந்து நாணயமாகவே வாங்கிக் கொண்டிருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஒரு மாற்றத்துக்காகவாவது வேறு எந்தெந்த வகையிலெல்லாம் தங்கத்தில் முதலீடு செய்யலாம் என்பதை அறிந்துகொள்வதற்கும், அதில் முயற்சி செய்து பார்ப்பதற்கும் சில வழிமுறைகள்...

தங்கக் காசுகள்!
தங்கக் காசுகள் என்பது ஆதிகாலம் முதலே புழக்கத்தில் இருந்தாலும்,      கடந்த சில ஆண்டுகளாகத்தான் முதலீட்டு வழிகளில் ஒன்றாக பிரபலமாகி  வருகிறது.
தங்கக் காசுகளை விற்கும் நகைக் கடைகள் அல்லது வங்கிகள் அதைத்   திரும்ப வாங்கிக் கொள்வதில்லை!
அவசரத்துக்கு விற்றுப் பணமாக்க முடியாது.
வங்கியில் அடமானம் வைத்து கடன் வாங்க முடியாது.
தங்கக் கட்டிகள்!
முன்பெல்லாம் ஒரு கிலோ, அல்லது அதற்கு  மேற்பட்ட அளவிலேயே பார் இருக்கும். பெரும் பணம் படைத்தவர்களால்         மட்டுமே வாங்க முடியும்.
இப்போது 5 கிராம் தொடங்கி 400 கிராம் வரை பலவிதமான      எடைகளில் தங்கக் கட்டிகள் கிடைக்கின்றன. இது பெரும்பாலும்             சுத்தத் தங்கமாக (99.5%) இருக்கும்.

கோல்டு இ.டி.எஃப்!
காகிதத் தங்கம் என்று அழைக்கப்படும் எக்ஸ்சேஞ்ச் டிரேடட்         ஃபண்ட் மூலம் தங்கத்தை யூனிட்களாக வாங்கிச் சேமிக்கலாம்.
தங்கத்தை நகையாக வாங்கும் போது           கழிக்கப் படும் சேதாரம், செய்கூலி பிரச்னை இதில் இல்லை.
பீரோவில் பொத்திப் பொத்தி பாதுகாக்க வேண்டும் என்கிற        அவசியமும் இல்லை.
ஒரு யூனிட் என்பது ஏறக்குறைய ஒரு கிராம் தங்கத்தைக் குறிக்கும்.    தங்கத்தின் விலை மாற்றத்தைப் பொறுத்து இதன் என்.ஏ.வி. மாறும்.         செலவு குறைவு. ஆனால், இதில் முதலீடு செய்ய டீமேட் கணக்கு தேவை.
கோல்டு பீஸ், கோல்டு ஷேர், கோட்டக் கோல்டு, ரிலையன்ஸ் கோல்டு, குவாண்டம் கோல்டு, ரெலிகேர் கோல்டு, எஸ்.பி.ஐ. கோல்டு, ஐ.சி.ஐ.சி.ஐ. புரூடென்ஷியல் கோல்டு என பல நிறுவனங்கள் கோல்டு இ.டி.எஃப். திட்டங்களை நடத்தி வருகின்றன.
கோல்டு மியூச்சுவல் ஃபண்டுகள்
குறைவான ரிஸ்க் உள்ள வழிகளில் ஒன்று தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டம். இது ஃபண்ட் ஆப் ஃபண்ட் வகையைச் சேர்ந்தது.
இந்தியாவில் இரண்டு ஃபண்ட் கம்பெனிகள் தங்க மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை நடத்தி வருகின்றன.
ஏ.ஐ.ஜி. வேல்டு கோல்டு ஃபண்ட், டி.எஸ்.பி. பிளாக் ராக் வேல்டு கோல்டு ஃபண்ட் போன்றவை உலக அளவில் தங்கச் சுரங்கப் பணியில் ஈடுபட்டுவரும் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்யக்கூடிவை.

கோல்டு ஃப்யூச்சர்ஸ்
காமாடிட்டி சந்தையில் தங்கத்தை வாங்கலாம். இதில் அதிகம் ரிஸ்க் உண்டு. போட்ட பணம் முழுவதும் நஷ்டம் அடையவும் வாய்ப்புண்டு. அதே நேரத்தில் பல மடங்கு வரை லாபம் கிடைக்கவும் வாய்ப்பு இருக்கிறது.
கமாடிட்டி ஃப்யூச்சர்ஸ் சந்தை பற்றி நன்கு விவரம் தெரிந்தவர்களுக்கு ஏற்றது இது.
தங்கத்தில் முதலீடு செய்வதற்கான அனைத்து வாய்ப்புகளையும் சொல்லி விட்டோம். இனி களத்தில் இறங்க வேண்டியது நீங்கள்தான்!
தங்கத் துளிகள்...
ங்கத்துக்கான தேவையில் முதல் இரண்டு இடங்களை இந்தியா, சீனா ஆகிய நாடுகளே முன்னிலை வகிக்கிறது. இந்தியாவில் 164 டன் தங்கத்துக்கான தேவை இருக்கிறது. விலை அதிகரிப்பின் காரணமாக இரண்டாவது காலாண்டில் ஆபரணத் தங்கத்தின் தேவை 123 டன்னாக (2%) குறைந்துள்ளது.
உலகளவில் கோல்டு இ.டி.எஃப். மூலம் 291.3 மெட்ரிக் டன் தங்கம் வாங்கப்பட்டுள்ளது.
தற்போது எலெக்ட்ரானிக் பொருட்களுக்கான தேவை அதிகரித்து வருகிறது. எலெக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பில் தங்கம் பயன்படுத்தப்படுவதால் தங்கத்தின் தேவையும் (107.2 டன்) அதிகரித்துள்ளது.


- பானுமதி அருணாசலம்
நன்றி - விகடன் குழுமம்


பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற