ஆட்டோவில் ஏறினேன்
சத்தமின்றி விம்மத் துவங்கி
பின் உடைந்து பெரிதாய் அழவும்
ஆட்டோக்காரன் திரும்பிப் பார்த்துத் தயங்கி
அழாதீங்க என்றான்
என் இடம் வந்ததும்
கொடுத்த இருபது ரூபாய்க்கு
எட்டு ரூபாய்சில்லறைஎண்ணிக் கொடுத்துவிட்டுச் சென்றுவிட்டான்
அந்த மீதி சில்லறையாவது
வாங்காமல் விட்டிருக்கலாம்!
- நன்றி: தமிழ் செய்தி