திருக்குறள்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை: அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல்

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கும் சட்டத்திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சர்கள் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில் மத்திய அமைச்சரவைக் கூட்டத்திலும், தொடர்ந்து நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டு நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி தலைமையில் மத்திய அமைச்சர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை அளிக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது.

இது குறித்து மத்திய வெளிநாடு வாழ் இந்தியர்கள் விவகாரத் துறை அமைச்சர் வயலார் ரவி கூறுகையில்,

இந்தியாவில் வாக்களிக்க வேண்டும் என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களின் கோரிக்கை பரிசீலிக்கப்படும் என்று பிரதமர் கூறியிருந்தார். அதன்படி மத்திய அமைச்சர்கள் கூட்டம் அவர்களுக்கு வாக்குரிமை அளிக்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் இந்திய ஜனநாயகம் மேலும் வலுவடையும் என்றார்.

இப்போதுள்ள சட்டப்படி வெளிநாட்டில் சென்று 6 மாதங்களுக்கு மேல் தங்கிவிட்டால் அவர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுவிடும்.

இப்போது கொண்டு வரப்படும் சட்டத் திருத்தத்தின் படி, வெளிநாடுகளில் இருந்தாலும், வாக்குப் பதிவு நடைபெறும் நாளில் தங்கள் தொகுதியில் இருந்தால் வாக்களிக்க அனுமதிக்கப்படுவர்.

-நன்றி. நக்கீரன்

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற