ஒரு புறம் இனிக்கும
மறு புறம் கசக்கும்
இரண்டும் இருப்பது
ஒரிடம் என்றால்
எனக்கு உண்மையில்
எப்படி இருக்கும் ?
கரும்பின் அடிப்புறம்
அதிகமாய் இனிக்கும்
அதன் இள நுனிப்புறம்
உவர்ப்பாய் கரிக்கும்
அதுபோல் என் மனம்
பார்ப்பவள் முகமும்
ஒருமுறை இனித்து
மறுமுறை சுளித்து
திரும்பும் பார்வையில்
பாவங்கள் நூறு॥
நாளும் காட்டி
பார்க்கும் மனதை
நோகச் செய்தால்
புலம்பும் இதயம்
எதையெண்ணி ஆறும் ?