திருக்குறள்

ஆத்மா அடங்க வைப்பதேன் ??

குளிர் மழை பொழியுமுன்னே
கூம்பி நிற்கும் மேகக் கூட்டம்
அன்பு மழை பொழிவதற்கோ
அமைதி காக்குதுன் முகம்?

அலைபாயும் விழியெங்கே?
களைசொட்டும் நகை எங்கே?
பார்த்தவுடன் இதழ் விரிக்கும்
முத்துப் பல் வரிசை யெங்கே?

காவியுடை அணிந்த மனிதன்
கோலம் உனக்கு வந்ததேன்?
தரைபதியா உன் கால்கள்
தடம் பார்த்து நடப்பதேன்?

எள்ளி நகையாடும் விழி
துள்ளியோடும் உந்தன் சுழி
கள்ளியென பெற்ற பெயர்
தள்ளி வைத்து செல்வதேன்??

ஓடும் மானை ஒத்தகால்கள்
ஆட்டம் சிறிதும் காட்டாதிங்கு
அடங்கி நடை போட்டு என்
ஆத்மா அடங்க வைப்பதேன் ???

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற