திருக்குறள்

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....



உன் கொலுசுகள்

முத்தமிட்டால் கூட

வெட்கப்படுகிறாய்...


மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்

நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...


நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை

பொறுக்குகிறாய்

என் மனமெல்லாம் வாசனைகள்


உயிருக்குள் ஊடுருவுகிறது உன்

சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்


நான் மர நிழலில் ஒதுங்கும்போது

நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்

ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்

அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....


உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்

உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை

சுவாசித்தபடி...


கனவுகள் சுகமானவை-வரும்

எல்லா கனவுகளிலும் நீ

பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்

சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...


-ரிஷி சேது
( நன்றி தட்ஸ் தமிழ்)

பதிவுகளை இலவசமாக ஈமெயிலில் பெற