திருக்குறள்

கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கவிதை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திருமங்கலம் வெற்றி தொடர்பாக முதல்வர் கருணாநிதி எழுதியுள்ள கவிதை:

உன் துதிக்கையை உலக்கை என்றார்; உன்
தூய வெள்ளைத் தந்தம்; கூர் தீட்டிய ஈட்டி என்றார்;
உரல் என்றார் - உன் கால்கள் நான்கு கண்டவர்கள்;
கனமான காதுகளை முறங்கள் எனக் கேலி செய்தார்!
இவ்வாறுக
ண்ணிருந்தும் குருடர்களாய்க்
கற்பனை பல செய்து, கதைகள் கட்டி-
பயனுள்ள பொருள்களையும்; படைக்குதவும்
பயமிகு கருவிகளையும் உவமையாக்கி; உனை
பழித்தும், புகழ்ந்தும்-குபைல சொல்லிப் பேசும் கும்பலை - வேடிக்கை
பார்த்துக் கொண்டேயிருந்தாய்; பாவம் நீ;
பாழும் அந்தக் கும்பல் பதறிக் குலைந்து சிதற,
கொம்புகளால் குத்தியும்;
கால்களால் மிதித்தும் - உன்னால்
பழி தீர்க்க முடியுமெனினும்
பதிலுக்குப் பதில் என்றில்லாமல்;
திருமங்கலத்து யானையாம் நீ;
திருக்குறள் வழி நிற்பதால்
இன்னா செய்தாரை ஒறுத்திட அவர் நாண
நன்னயஞ் செய்து விடுவாய்!

- கலைஞர் கருணாநிதி.

எது உண்மை ???

மணக்கும் வரை மலர் என்பார்
மடிந்த பின்னே குப்பை என்பார்
எரியும் வரை விறகு என்பார்
எரிந்த பின்பு சாம்பல் என்பார்
கட்டில் நாடகம் அதிசயம் என்பார்
தொட்டில் குழந்தையோ ரகசியம் என்பார்
இறக்கும் வரை இவன் என்பார்
இறந்த பின் பிணம் என்பார்
இதில் எது உண்மை?

- தினந்தந்தி மாணவர் மலர்

நினைவலைகள்

கடலலைக்கு வேண்டுமானால்
கரைக்கு வந்து போவது
பழகிப்போயிருக்கலாம் - ஆனால்
கரைக்கு வந்து போவது
பழக்கமில்லையடி
அது என்றும் அதே இடத்தில்தான்
இருக்கும்।
உனக்கு வேண்டுமானால்
நம் பிரிவு சந்தோஷம் தரலாம்
ஆனால் எனக்கு வேதனையடி
உனக்குத் தெரியுமா
திறந்தவுடன் உன்னைக் காட்டும்
மணிப்பர்ஸ்,
உனது குரலைக் கேட்க மட்டுமே
காத்திருக்கும்
எனது செல்போன்,
உனக்காக மட்டுமே மீண்டும் மீண்டும்
எழுதத் துடிக்கும்
விரல்கள்
உன்னை மட்டுமேசிந்திக்கச் செய்யும்
சிந்தனைகள்
உனது வருகைக்காய்காத்திருக்கும்
எனது கால்கள்
உன்னிடம் மட்டுமே பேசத் துடிக்கும்
எனது உதடுகள்.
இப்படி சொல்லப் போனால்
அநேகம்எனக்குள்ளே
இயங்கிக் கொண்டிருக்கும்உனது
நிலைவலைகளைஎன்னைவிட்டு
பிரிந்து போகச் சொல்லடி
பிறகு -
நான் உன்னை பிரிந்து போவதை
யோசிக்கிறேன்।

- ஜோயில்

அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

கா. அ‌ய்யநாத‌ன்

ஆறும் நீரும் உனக்குச் சொந்தமென்றால்
வானும் மேகமும் யாருக்குச் சொந்தம்?

வயலும் விளைச்சலும் உனக்குச்
சொந்தமென்றால்
வான் மழையும் பருவமும் யாருக்குச்
சொந்தம்?

நிலமும் நாடும் உனக்குச்
சொந்தமென்றால்
இப்புவியும் வளியும் யாருக்குச் சொந்தம்?

விழிப்பும் உறக்கமும் உன்னுடையதென்றால்
இரவும் பகலும் யாருக்குச் சொந்தம்?

வாழ்வும் பயனும் உன்னுடையதென்றால்
உன் பிறப்பும் இறப்பும் யாருக்குச் சொந்தம்?

ரத்தமும் சதையும் மூச்சும் நீயென்றால்
உன் உயிரும் ஆத்மனும் யாரென்று கூறு।

என்னுடையது என்னுடையது என்கின்றாயே
நீ இல்லையென்றாலும் அனைத்தும் இருக்குமடா

இருப்பதெல்லாம் உன்னால் வந்ததுமல்ல நீ
இல்லாமல் போனால் மறையப்போவதுமல்ல

ஏனென்று தெரியாமல் வாழப் பிறந்துள்ள நீ
எனக்கென்று இவ்வாழ்கை எதற்கென்று பொருள்தேடு

சுகபோகியாய் அனுபவிக்கும் உனக்கென்று உள்ளதெது?
கட்டையில் எரித்தாலும், குழி தோண்டிப் புதைத்தாலும்
அடுத்த ஆறு மாதத்தில் அடையாளம் அற்றுப்போகும் நீ
உன்னுடையதென்று ஒன்றுமில்லை என்றுணர்

இருக்குமனைத்தும் அனைவருக்குமேயெனும்
உண்மையறிந்து ஒன்றாய் வாழ்ந்திட
இறைவன் பங்கிட்டு அளித்ததேயெல்லாம்
அதிலென்ன உன் பங்கு என் பங்கு?

காவிரி கங்கை சிந்து நதிகளெல்லாம்
நம் பிறவியைக் கொடுத்த இறைவனுடையது
தாயின் முலைப் பாலையொத்தது
நதி நீர்பு‌னிதம் அதுவென்று போற்றிப் பகிர்ந்துகொள்

அடித்துக் கொண்டு வாழலாம் மிருகங்கள்
அனுசரித்து வாழப் பிறந்தவனே மனிதன்!

நன்றி - வெப்துனியா

'இல்லாத வெளிச்சம்'

உலகம் ஒரு நிழல்
நானுமொரு நிழல்
தென்னை ஒரு நிழல்
வெளிச்சத்தின் மறுபக்கத்தில்
நிழலுடன் நிழலாக
வடிவங்கள்
காற்றின் காலடி
சப்தங்களுடன்
தென்னை சிலிர்க்கிறது
விரிந்த இரவின் மேல்
ஒற்றை நிலவு
எதிர்பாராத மின்வெட்டு
மனதில் உரிமையற்ற ஏக்கம்

- அனு

என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

உன் செல்ல கோபத்திற்காக
எத்தனை முறை வேண்டுமானாலும்
முட்டாளாகத் தயார்....

என் உயிரில் பாதி
உன்னிடமும் மீதியை
உன் வீட்டோர தும்பைப்பூக்களை சுற்றிவரும்
பாட்டாம்பூச்சிகளிடமும் வைத்திருக்கிறேன்....

நீ நட்சத்திரங்களை ரசித்திருக்கும்
ஓர் மொட்டைமாடிப் பனியிரவில்
நான் உன்மீதான காதலை சொன்னேன்....
நீ நட்சத்திரங்களை பூவாக்கித் தலைசூடி
நிலவாய் சிரித்தாய்...
நான் பைத்தியமானேன்...

நீ கனவுகளை கொடுத்து
என் நினைவுகளை எடுத்துப்போனாய்...

என் உறவுகள் என்னை ஆச்சர்யமாய் பார்க்கிறது
நான் உன்னைக் காதலித்துக் கொண்டிருக்கிறேன்...

நீ என் நாட்களை நிரப்பிவிடுகிறாய்
நான் தேன் குடித்த வண்டாய்
சுற்றிக் கொண்டிருக்கிறேன்....

நீ எதார்த்தமாய் திரும்பினாலும்
நான் என்னை பார்ப்பதாய்
நினைத்துக் கொள்வேன்
அது என்னை வாழவைக்கிறது....

- ரிஷி சேது

அவசரம்


அவசர உலகின் அலங்கோலம்
ஆண் போனால் என்ன ?
பெண் போனால் என்ன ?
என் அவசரம் எனக்கு…

நாங்கள் மூத்த குடிமக்கள்-சொன்ன
சொல்லை தட்டாதவர்கள்
ஆம்

ஆத்திரத்தை அடக்கினாலும்
-------------அடக்க முடியாது

வெண்ணிலவை உங்களுக்கு.

வெண்ணிலவை உங்களுக்கு
கண்ணியரே எதற்காக
உவமையாக சொல்லி வைத்தான் - புலவன்
எதைக்கொண்டு புலம்பிச் சென்றான்

ஓர் உருவாய் நிலைக்காமல்
ஓரிடத்தில் நில்லாமல்
நாளும் ஓர் உருவம் கொண்டு
நாழிக் கொருதிசை மாறும்

குணம் போன்றே நீங்களும்
எண்ணம் ஒன்றாய் இல்லாமல்
உண்மை ஏக்கம் கொள்ளாமல்
கண்கள் காணும் காளையிடம்

எண்ணம் கொடுத்து அதுவும் கொஞ்ச
நாளில் வேறு அழகு மனிதன்
கண்டதும் பாதை மாறி
பழைமை மறந்து புதிய மனிதன்

பாதை செல்லும் குணத்துக்காக
பாவையரே உங்களையே
பாரில் இந்த புலவனிவன்
பால் நிலவிற்குரைத்தானா ?

இரண்டும் இருப்பது..

ஒரு புறம் இனிக்கும
மறு புறம் கசக்கும்
இரண்டும் இருப்பது
ஒரிடம் என்றால்
எனக்கு உண்மையில்
எப்படி இருக்கும் ?
கரும்பின் அடிப்புறம்
அதிகமாய் இனிக்கும்
அதன் இள நுனிப்புறம்
உவர்ப்பாய் கரிக்கும்
அதுபோல் என் மனம்
பார்ப்பவள் முகமும்
ஒருமுறை இனித்து
மறுமுறை சுளித்து
திரும்பும் பார்வையில்
பாவங்கள் நூறு॥
நாளும் காட்டி
பார்க்கும் மனதை
நோகச் செய்தால்
புலம்பும் இதயம்
எதையெண்ணி ஆறும் ?

ஆத்மா அடங்க வைப்பதேன் ??

குளிர் மழை பொழியுமுன்னே
கூம்பி நிற்கும் மேகக் கூட்டம்
அன்பு மழை பொழிவதற்கோ
அமைதி காக்குதுன் முகம்?

அலைபாயும் விழியெங்கே?
களைசொட்டும் நகை எங்கே?
பார்த்தவுடன் இதழ் விரிக்கும்
முத்துப் பல் வரிசை யெங்கே?

காவியுடை அணிந்த மனிதன்
கோலம் உனக்கு வந்ததேன்?
தரைபதியா உன் கால்கள்
தடம் பார்த்து நடப்பதேன்?

எள்ளி நகையாடும் விழி
துள்ளியோடும் உந்தன் சுழி
கள்ளியென பெற்ற பெயர்
தள்ளி வைத்து செல்வதேன்??

ஓடும் மானை ஒத்தகால்கள்
ஆட்டம் சிறிதும் காட்டாதிங்கு
அடங்கி நடை போட்டு என்
ஆத்மா அடங்க வைப்பதேன் ???

நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....



உன் கொலுசுகள்

முத்தமிட்டால் கூட

வெட்கப்படுகிறாய்...


மேகங்கள் நிலவைக் கடக்கும்போதெல்லாம்

நீ என் நினைவுகளைக் கடக்கிறாய்...


நீ உன் வீட்டில் வீழ்ந்து கிடக்கும் மலர்களை

பொறுக்குகிறாய்

என் மனமெல்லாம் வாசனைகள்


உயிருக்குள் ஊடுருவுகிறது உன்

சிரிப்பொலி-மரணம்வரை பத்திரமாய் வைத்திருப்பேன்


நான் மர நிழலில் ஒதுங்கும்போது

நீ மரக்கன்றுகள் நட்டுக் கொண்டிருக்கிறாய்

ஓர் மழையிலோ ஓர் வெயிலிலோ மீண்டும் ஒதுங்குவேன்

அப்போது நீ பூக்களை காதலி்த்துக் கொண்டிருக்கலாம்....


உலகில் காற்றும் நீரும் தீர்ந்தபின்னும்

உயிர்வாழ்வேன் உன் நினைவுகளை

சுவாசித்தபடி...


கனவுகள் சுகமானவை-வரும்

எல்லா கனவுகளிலும் நீ

பூங்கொத்தோடு என்னைக் கடக்கிறாய்

சிறுகுழந்தையாய் சிரித்திருக்கிறேன்- நான்...


-ரிஷி சேது
( நன்றி தட்ஸ் தமிழ்)
நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் என்ற கவிதைத் தொகுப்பிலிருந்து நன்றியுடன்

(ஈரோடு தமிழன்பன்)


அகல் விளக்காக
இரு;
அது முடியாவிட்டால் பரவாயில்லை।
சூரியன் மேல் சாணி அடிக்காதே!

பாதை போட
வர மறுத்தாய்; பாதகமில்லை,
பாதையில்
முள்ளையும், கண்ணாடித்
துண்டையும் தேடாதே.

சத்தியத்தின்
பாதவிலங்கை உடைத்தெறிய
முடியவில்லையா?
சங்கடப்படாதே!
பொய்யின் உதட்டுக்கு
புன்னகை தயாரிக்க
உலகை உருக்காதே!

அறத்திற்கு ஆதரவாகப்
பேசத்தவறினாய்;
அது குற்றமில்லை.

ஊளையிட்டபடி
ஓடி வராமல் உன் வார்தைகளைச்
சங்கிலியால்
கட்டிபோடக் கூடாதா?

கொடுமைக்கு எதிராக
இரத்த முழக்கம் செய்!
முடியவில்லையா?
தப்பில்லை.

அநியாங்களின்
படுக்கை அறைக்கு
ஆள் அனுப்பும் வேலை உனக்கு
நல்லதா?

மகத்தான
மானுட இசை பெருக்கில்
உன் குரலை சங்கமிக்கச் செய்!.
ஒப்பவில்லையா?
ஒதுங்கிக் கொள்.

ஒளிந்திருந்து
அபஸ்வரங்களை விட்டெறிந்து
காயங்களைக் கண்டு
கை கொட்டிச் சிரிக்காதே!

மாறாக----
குயிலோடு
உனக்குக் கோபம் என்பதால்
கழுதையிடமா போய்ச்
சங்கீதம் கேட்பாய்?

புலியோடு
முற்றிவிட்டது பகை என்றால்
போராடு! அதை விட்டு விட்டு
ஓடிப்போய்
நரியிடம் நட்புக் கொள்ளாதே.

கடலிடம்
ஒரு முறை தோற்றால்
மறு முறையும் மோது.
ஒடைகளோடு சேர்ந்துகொண்டு
அறிக்கை விடாதே!

நீ உயர முடியவில்லை
என்பதற்காக மலை மீது
கற்களை விட்டெறியாதே!

மற்றவர்களின்
மகுடங்களை மட்டம் தட்டக்
குப்பைக் கூடையைச்
சூட்டிக் கொள்ளாதே
உன் தலையில்.

உனக்கும்
உண்மைக்கும் ஊடல் என்றால்
பொய்யின் கன்னத்திலா
போய் முத்தமிட்டுக் கொண்டிருப்பாய்?

வாழ்க்கை உனக்கு
அறைகூவல் விட்டால் நீயே சமாளி!
சாவிடம் போய்
யோசனை கேட்காதே!

எது தேசபக்தி?

- ஈரோடு தமிழன்பன்

பூமி மங்கையின்
பூங்கன்னத்தில் முத்தம் போடும்
புலவன் நான்...
சூரியனுக்கும் சந்திரனுக்கும்
சொந்தக்காரன்...
கண்மணி கருகிய
மின்மினிக் கூட்டம்
இந்தவெளிச்சத்தின்
புதல்வனைவிமர்சிக்கிறது।

என் தமிழ்மேல்
தமிழ் நாட்டின் மேல்
அன்பு வைப்பது என் பிறப்புரிமை.
இந்தியத் திருநாட்டின்மேல்
இதயத்தில் போடும்
பாசப் பதியம் என் சிறப்புரிமை.

புத்தரும் பெரியாரும்
என் அறிவு நரம்புகளில்!
மகாவீரரும் இராமானுசரும்
என்
இரத்த அணுக்களில்!
என்னைக்
கோடி அலைகளாக்கிக்
கங்கைக்கும் காவிரிக்கும்
பங்கிட்டுக் கொடுப்பே.
உறிஞ்சப்படுபவன்
ஒரிசாவில் இருந்தாலும்
உள்ளூரில் இருந்தாலும்
அவன் என்தோழன்!

அபகரிக்கப்பட்ட வைகறைக்காக
ஆர்த்தெழுபவன்
ஆப்பிரிக்காவில் இருந்தால் என்ன?
ஈழத்தில் இருந்தால் என்ன?
அவன் என் வர்க்கம்.
கொடியை உயர்த்திவிட்டுப்
பாரத தேவியின் பாதச் சிலம்பைத்
திருடுவதுதான் தேச பக்தியா?

அவளை
அடகு வைத்துத்
தங்கள் வீட்டுக்குத்
தங்கச் சாளரம் போடுவதுதான்
தேச பக்தி என்றால் - அந்தத்
தேச பக்தி,
எனக்குத் தேவையில்லை!

கள்ள வாக்குகளால்
ஜனநாயகத்தைக் கற்பழிக்கும்
பதவிக் காமம்தான் தேச பக்தி என்றால்
ஒப்புக் கொள்கிறேன். அந்தத்
தேச பக்தியில்லாக் குற்றவாளி நான்!
தேச பக்தியின் முன்னோடிகள்
நரிகளின் மூதாதையர் ஆனதுஎப்போது?

(நடை மறந்த நதியும் திசை மாறிய ஓடையும் கவிதைத் தொகுப்பிலிருந்து)

விதைகளும் வேர்களும்

- ஹேமமாலினி

விதை-
பூமிக்குள்
புதையுண்டு
தன்னைத் தானே
சிறைப்படுத்த,
புதிய செடியொன்று
பூத்து எழுந்தது,
மண் மேலே !

இலைகளும் கிளைகளும்
காற்றோடு கைகுலுக்கினாலும்
வேர்களுக்கு மட்டும்
உலகம் என்றும்இருட்டறை!

திருமணத் தோட்டத்தில்
பெண்ணும் ஒரு விதைதான்!

தனிப்பட்ட விருப்பங்களை
தனக்குள்ளே புதைத்து
தாயான பின்னர் தன்
தனித்துவத்தை மறந்து...
குடும்பத்தின் வாரிசுகள்
வானில் வலம் வந்தாலும்
அம்மாவின் உலகம்
அடுப்படி தாண்டுவதுண்டா?

கனிகளை மட்டுமே
கண்டு பாராட்டும் நாம்,
வேர்களை இனம் கண்டு
வாழ்த்துவது எப்போது?

நீ வந்த பின்பு...-

- ரா. மகேந்திரன்

விழித்த பின்பும்
விட்டு விடாத
எனது காலை சோம்பல்!
பலமுறை முயன்றும்
நான் வெல்லாத
என் தோல்விகள்!
எப்போதும் நிறைவேறாமல்
போகும் என் கனவுகள்!
சோகம் சுமந்து திரியும்
என் தினசரி நினைவுகள்!
இவை அத்தனையும்
கதிரவன் முன் பனி போல
காணாமல் போயின...
முன்பு என்னிடம் துளியும் இல்லாத
தன்னம்பிக்கை
என்னை வந்தடைந்த மறுகணமே!

நட்பின் இலக்கணம்...

'உடுக்கை இழ‌ந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு' என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்।

எரிமலை இல்லாத, ஆறுகள் இல்லாத ஏன் திரையரங்குகள் கூட இல்லாத நாடுகள் இருக்கின்றன। ஆனால், நண்பர்கள் இல்லாத நாடுகள் என்று ஏதும் இல்லை.

அத்தகைய மகத்துவம் வாய்ந்த நட்பினை, நட்பின் உயர்வினை கொண்டாட, கூடி மகிழ அன்பினைப் பரிமாறி ஆரவாரம் செய்ய எல்லாராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட தினமே 'ந‌ட்பு தினம்'.

வயது வரம்பு இல்லாமல், பாலினம் பாராமல் பலராலும் பருகப்படுவதும், பாராட்டப்படுவதும் தொட்டுத் தொடரும் இந்த தோழமைதான்.ஒவ்வொரு ஆ‌ண்டு‌ம் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக் கிழமை நட்பை‌ப் போற்றும் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

அந்நிய இறக்குமதியால் ஆயிரமாயிரம் தினங்கள் அவ்வப்போது வந்து போனாலும், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் என்றுமே நல்ல வரவேற்பு இருப்பதை மறுக்க முடியாது. காதலர் தினத்தை கணிசமாக எதிர்க்கும் நம கலாச்சாரக் காவலர்கள், நண்பர்கள் தினத்திற்கு மட்டும் சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்து சிம்மாசனத்தில் அமர வைக்கிறார்கள் என்றால் அதற்கு காரணம் இல்லாமல் இல்லை.

நாடு போற்றும் நல்ல நட்பினை நம் இதிகாசங்களும், புராணங்களும் சிறப்பிக்கத் தவறவில்லை.நட்பினை நேரில் பார்த்துத்தான் நம் நேசத்தை தெரிவிக்க வேண்டுமென்று இல்லை. பேசிப் பழகி பிரிந்து வருந்த வேண்டும் என்றும் இல்லை. இதனை நம் புராண கதைகளில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.

ஆம்! நமக்கெல்லாம் தெரிந்த உதாரணம் கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பைக் கூறலாம். அன்று, புரவலரும், புலவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொள்ளவில்லை, பேசிக் கொள்ளவில்லை என்றாலும் நட்பின் உச்சாணிக் கொம்பில் ஏறிக் கொண்டு எல்லோருக்கும் பாடாமாய் அமைந்தார்கள்.

ஒருவரின் புகழ் பற்றி மற்றொருவர் அறிந்து நட்பு பாராட்டினார்கள். தனது நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிரிழப்பதைக் கேள்விப்பட்டு தாமும் வடக்கிருந்து உயிர் துறந்தார் பிசிராந்தையார்.

நமது இதிகாசம் கூறும் நட்பு : கர்ணன் - துரியோதனன். தோழமை என்ற ஒரே வலிமையான ஆயுதத்திற்காக, சொந்தம் என்று தெரிந்தும் பாண்டவர்களை போரில் எதிர்த்து நின்றான் கர்ணன்.

ஒருமுறை துரியோதனின் மனைவியும், கர்ணனும் பகடை விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது துரியோதனின் மனைவி அணிந்திருந்த முத்துமாலையை கர்ணன் பற்றி இழுக்க அது அறுந்து சிதறி கீழே விழுந்தது.

அத்தருணம் அங்கே துரியோதனன் வர, நண்பனின் மனைவியிடம் தவறாக நடந்து விட்டோமோ என்ற பதைபதைப்பில் கர்ணன் நிற்க, செய்வதறியாது திகைத்து நின்றாள் துரியோதனன் மனைவி.

தனது நண்பனை சிறிதும் சந்தேகப்படாத துரியோதனன்,.....
சிதறிய முத்துக்களை 'எடுக்கவோ, கோர்க்கவோ' என தன் மனைவியைப் பார்த்துக் கேட்டான்.

நட்பு என்றால் இப்படி இருக்க வேண்டும்,என்பதற்கு இலக்கணமாக திகழ்ந்தவர்கள் இவர்கள்.ஆனால்... ஆண்-பெண் நட்பு என்றால் அங்கு காதல் புகுந்து விடுகிறது. இல்லையேல் காமம் தலைதூக்குகிறது என்ற அவலமான சமூகப் பார்வை இன்றைய இளைய சமுதாயம் மீது படர்ந்துள்ளது.

துளியே கடல்
என்கிறது
காமம்

கடலே துளி
என்கிறது
நட்பு
என்றார் புதுக்கவிஞர் அறிவுமதி.

அன்பு... காதல்... நட்பு என்ற மூன்றிற்கும் வித்தியாசம் தெரியாமல் இன்றைய நம் தலைமுறை குழம்பிக் கிடக்கிறது.இவை ஒன்றோடொன்று பிண்ணிப் பிணைந்திருந்தாலும், ஒவ்வொன்றிற்கும் இடையே ஒரு மெல்லிய நூலிழை இடைவெளி இருக்கத்தான் செய்கிறது.

இதனை கவனமாய் கையாள்கிறவனுக்கு மட்டுமே காதலியுடனும், தோழியுடனும் நெருடல் இல்லாத நெருக்கம் ஏற்படும்.

நகுதல் பொருட்டு அன்று நட்டல் மிகுதிக்கண் மேற்சென்று இடித்தல் பொருட்டு - என்றார் வள்ளுவப் பெருந்தகை.

சிரித்து மகிழ, நல்லன சொல்வதற்கு மட்டுமே அல்ல நட்பு. சிறந்த நட்பு என்பது தவறு செய்கிற போது, தடுத்து நிறுத்தி கண்டிப்பதே ஆகும் என்கிறார் வான் புகழ் கொண்ட வள்ளுவர்.

எனவே வள்ளுவரின் வாக்கிற்கேற்ப வாழ்ந்து காட்டுவோம்!
வாருங்கள் நண்பர்களே! ஆகஸ்ட் 3 நண்பர்கள் தினம்!

- நன்றி
வெப்துனியா

இறைபோல் எங்கும் இருப்பது நட்பு!


மானுட மனத்தின் தூய்மை

இரக்கம் சுரக்கும் சுணை

இன்பத்தை அள்ளித்தரும் கற்பகத் தரு

துயரத்தில் பங்கேற்கும் துணிவு

துன்பத்தை தாங்கிடும் சுமைதாங்கி

பரந்த சிந்தனையின் ஊற்றுக்கண்

உண்மையை அறியும் உரைகல்

வஞ்சத்தை வதைக்கும் சூரியன்

நியாயத்தைக் காக்கும் அரண்

நேர்மையாளனின் உடை வாள்

பொய்மையை பொசுக்கும் யாகத் தீ

பேருண்மையைக் காணத் தூண்டும் ஞானக் கண்

தூய அன்பின் ஒளிக் கதிர்... நட்பு


வானமும் பூமியும் தொடுவது நட்பு

வயலும் மழையும் கலப்பதும் நட்பு

நிலமும் நெல்லும் வளர்வதும் நட்பு

வேராயும் விழுதாயும் படர்வதும் நட்பு

நாடு மொழிகளைத் தாண்டியது நட்பு

உலகளாவிய அமைதிக்கு வேண்டும் நட்பு

உன்னத வாழ்விற்கும் தேவை... நட்பு


- நன்றி

வெப்துனியா

நான் பெண்



ஒரு காட்டாறு


ஒரு பேரருவி


ஓர் ஆழக் கடல்


ஓர் அடை மழை


நீர் நான்


கரும் பாறை மலை


பசும் வயல் வெளி


ஒரு விதை


ஒரு காடு


நிலம் நான்


உடல் காலம்


உள்ளம் காற்று


கண்கள் நெருப்பு


நானே ஆகாயம்


நானே அண்டம்


எனக்கென்ன எல்லைகள்


நான் இயற்கை


நான் பெண்





- அனார் கவிதைகள்

யாழன் ஆதி கவிதை


காலம் தொலைத்த வாழ்வின்

இருப்புகள்

கைகள்ளில் ஊன்றுகோல்களாயின


சுருங்கிய தோலும்

நரைத்த முடியும்

வற்றிய உடலும்

நாட்கள் நகர்த்திய காய்கள்


அனுபவத்தின் நதிகள்

வற்றிக் கிடக்க

மீந்திருக்கும் கட்டங்களை

நிரப்பி முடிக்க

எத்தனிக்கும் மனதின் அலைகள்


திறக்கப்படாத கதவுகளும்

மறுக்கப்பட்ட வழிகளும்

நெடுகிலும் நிறைந்திருக்க

பள்ளங்களையும் மேடுகளையும்

பார்வையால் தடவி

தத்திதத்தி

நடக்கின்றன கால்கள்


அறிவிக்கப்படாத முடிவுகளுக்காய்

கண்கள் முளைத்த கோல்களை

செலுத்தி தட்டுகிறது முதுமை


ஆசைகள் தூர்ந்துபோன வாழ்வில்

பாம்பு கடிபட்ட

தாயத்தைப் போல

மீண்டும்

கீழிருந்தே ஆரம்பமாகிறது

ஆட்டம்

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள கவிதை:


முத்தமிழ் வித்தகராம் நல்லோர்க்கும்

முதுபெரும் புலமையில்

வல்லோர்க்கும்


முரசு கொட்டி மொழிப்போரில்

அணிவகுத்தோர் அனைவர்க்கும்

அரசொன்று வருமென்று கருதிடாமல் அறப்போர்களிலே


ஆவிதனை அர்ப்பணித்தோர்க்கும்; அகவை எண்பத்தி ஐந்தில்

அன்பு குழைத்து; அய்யன்மீர்! வீர வணக்கம் செலுத்துகின்றேன்.


வழித்தோன்றல்களாய் அவர்க்கு வாய்த்த குடும்பத்தார்க்கும்

கழிபேருவகைப் பொங்கி வழிந்திட நன்றிகளைக்

குவிக்கின்றேன்.


அலை அலையாய்ப் பெருகி அணி வகுத்துத் திராவிட இயக்க

அரண் காத்திட ஆர்த்தெழாமல் அன்றைக்கு அயர்ந்திருப்பின்


தீரா விடமன்றோ நம்மினத்தைத் தீர்த்துக் கட்டியிருக்கும்

ஈரோடு சிங்கமன்றோ எழுந்து முழங்கிற்று!


போராட வா தம்பியென்று காஞ்சியின் புறநானூறும்

அழைத்தபோது

வேரோடு தமிழினம் வீழாமல் காப்பதற்கு;


வெகுண்டெழுந்து வந்தவரில் ஒருவன் நான்!

பகுத்துணர்ந்து பல்லாண்டுக‌ளாக இனமுழக்கம் செய்கின்ற


பண்பாளர் எனக்கு மூத்த பேராசிரியர்

பழகு தமிழில் ஆணையிட்டு அழைத்த பிறகும்


பகுத்தறிவுப் பாசறையாம் பழைய தாய்க் கழகத்து வீர

மணிக்குரலும் விரிவானமாய் மனம் தோய்த்து


பல்லாயிரம், பல லட்சம் உடன் பிறப்பாளர்

பாசத்தை வெள்ளமாய்ப் பாய விட்டுப்


"பணிந்திடுக எம் அன்புக்கு!'' என ஆணையிட்ட பின்னும்

துணிந்து நான் துண்டிக்க முடியுமோ உடன்பிறப்புத் தொடர்பையெல்லாம்;


அதனாலே பாவேந்தர் பாடல் வரி போல

"தொந்தரவுக்குள்ளே நான் சுகம் காண'' ஒப்பிவிட்டேன்!


உன் வாழ்த்தினையேற்று

என் வணக்கமும் வாழ்த்தும்

வட்டியும் முதலுமாய் வழங்குதற்கே!